கஜா புயல் நிவாரணம் குறித்து ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கருத்து

நேற்று அதிகாலை நேரம் கஜா புயல் தமிழகத்தை சேர்ந்த நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மாவட்டங்களை தாக்கியது.

இந்த புயல் தாக்குதலால் 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வந்தள்ள.

தென்னை, வாழை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. பால், உணவு, மின்சாரம் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கஜா புயல் குறித்து கூறியுள்ளதாவது…

Rajinikanth‏Verified account @rajinikanth

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.” என ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுநாள் வரை தமிழக அரசை குற்றம் சாட்டி பேசி வந்த கமல், முதன்முறையாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு,தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும்@maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *