சுஜா வருணி-சிவகுமார் தம்பதிக்கு பிரியாணி விருந்தளித்த கமல்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். அதில் நடிகை சுஜா வருணியும் பங்கேற்றார்.
அப்போதே தன் திருமணத்தை அப்பா ஸ்தானத்தில் இருந்து கமல்ஹாசன் நடத்தித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி சிவாஜி பேரன் சிவாஜி தேவ் என்கிற சிவகுமாருக்கும், நடிகை சுஜா வருணிக்கும் திருமணம் நடைபெற்றது.
கமல் தலைமை தாங்கினார்.
இந்நிலையில் இந்த புது ஜோடிக்கு தனது வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் கமல்.
அந்த படங்களை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.