ஊழலற்ற அரசியல் தேவை என தன் பிறந்தநாளில் கமல் பேச்சு
சில மாதங்களுக்கு அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்.
(7.11.18) அவர் தன் 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…
ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்கவும் மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது.
நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது; நான் மக்களின் கருவி.” என பேசினார்.