விளையாட்டில் விவசாய செஞ்சுரி… கனா விமர்சனம்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ்சத்யராஜ்தர்ஷன்சிவகார்த்திகேயன்இளவரசு மற்றும் பலர்
இயக்கம் – அருண் ராஜா காமராஜ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
இசை – திபு நினான் தாமஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்

கதைக்களம்

சோறுக்கே வழியில்லை.. ஆனால் ஸ்கோர் கேட்குதா? என்ற டயலாக்கை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். ஆனால் விவசாயத்தையும் விளையாட்டையும் சரியாக கலந்து சிக்ஸர் அடித்துள்ளனர் சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ்.

என்றும் விவசாயமே என் உயிர் மூச்சு என வாழ்கிறார் சத்யராஜ் (முருகேசன்). ஆனாலும் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருப்பதால் தன் மகள் ஐஸ்வர்யாவின் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்துகிறார்.

கிராமத்து ஆண்களுடன் தன் கிரிக்கெட் ஆர்வத்தை தொடங்கும் ஐஸ்வர்யா பல தடைகளை கடந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அணிக்கு முன்னேறுகிறார்.

ஆனால் இறுதியில் சில காரணங்களால் அணியில் விளையாட முடியாமல் நிரகாரிப்படுகிறார்.

அதுபோல் விவசாய கடனால் வீட்டை ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சத்யராஜ்.

அதன் பின்னர் என்ன ஆனது? இருவரும் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்

கௌசல்யா கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெண்கள் கிரிக்கெட் ஆடும் ஆட்டமே புதுக்களம் தான். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

அம்மாவின் அடி, அப்பாவின் பாசம், தோழிகளின் அட்வைஸ், ஆண்களின் ஆதரவு, ஏழ்மையின் உச்சம் என அனைத்து உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறார். இவரின் சின்ன வயது கேரக்டரில் நடித்துள்ள அந்த சிறுமியும் நல்ல தேர்வு.

ஐஸ்வர்யாவின் மிகச்சிறந்த படங்களில் இந்த படம் இடம்பெறும்.

வில்லன், ஹீரோ என அசத்திய சத்யராஜ் இதில் ஒரு அப்பாவாக ஜெயித்திருக்கிறார். இவரை தவிர வேறு யாராவது அந்த கேரக்டரை செய்ய முடியுமா? என்பது சந்தேகம் தான்.

சத்யராஜின் மனைவிஅவரின் நண்பர்

சத்யராஜின் நண்பர் இளவரசு, நாயகன் தர்ஷன் ஆகியோரும் நல்ல தேர்வு. அதுபோல் ஐஸ்வர்யாவின் அம்மாவும் அசத்தல்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் சச்சின் மற்றும் டெண்டுல்கரும் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றம் என்றாலும் அவர் வந்த பிறகு படம் அடுத்த லெவலுக்கு செல்கிறது. அதை அழுத்தமான வசனங்களுடன் அழகாக செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

திபு நினான் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள… பாடல் ரசிக்க வைக்கிறதுகிரிக்கெட் பாடலும் உற்சாகத்தை கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்எடிட்டர் ரூபன் இருவரும் கச்சிதம்.

வசனங்கள் படத்தில் அப்ளாஸை அள்ளும்.

லஞ்சம் கொடுத்தவருக்கு ஏன் மரியாதை கொடுக்கனும்?

உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்லஉன்ன… என்ற டயலாக்குகள் இளைஞர்களுக்கு செம டானிக்.

ஜெயிச்சவங்க சொல்றதத்தான் இந்த நாடு கேட்கும்நீ எது பேசினாலும் ஜெயிச்சிட்டு வந்து பேசு.

ஒரு நிஜ கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்திற்கே நம்மை கொண்டு சென்றுவிட்டார் டைரக்டர் அருண்ராஜா காமராஜ்.

க்ளைமாக்ஸ் காட்சிகள் என்றும் நம் மனதை விட்டு அகலாது.

கிரிக்கெட்டை நாங்க காப்பாத்திட்டோம். விவசாயத்தை யார் காப்பாற்ற போகிறார்கள்? என ஐஸ்வர்யா கேட்கும்போது நம் கண்கள் கலங்கும்.

மொத்தத்தில் கனா…  விளையாட்டில் விவசாய செஞ்சுரி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *