கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி-165 பட டைட்டில் குறித்த தகவல்
காலா வை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இது ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 07/09/2018 மாலை 6 மணிக்கு இப்பட டைட்டில் & மோசன் போஸ்டரை வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.