ரஜினிக்கு பிறந்தநாள் பரிசாக ஏழைகளின் கண்ணீரை தந்த கஸ்தூரி

சினிமாவில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது ரஜினியை தவிர மற்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார் நடிகை கஸ்தூரி.

பல ஆண்டுகளாக அவர் எங்கே இருக்கிறார்என்பதே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சமூக கருத்துக்களை கூறி மீண்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது அவரை தாக்கி பேசினார்அதன் பின்னர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு (டிசம்பர் 12) பிறந்தநாள் பரிசாக வித்தியாசமான ஒன்றை அளித்துள்ளர்.

அது குறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது

மானு மிஷன் முயற்சியில்லைகா நிறுவனத்தின் ஆதரவில்ஏழை பிள்ளைகள் சிலரை தேர்வு செய்து,ரஜினி நடித்த 2.0 படம் பார்க்க அழைத்து சென்றேன்.

அந்த மணி நேரமும் வேதனையை மறந்து உற்சாகமாக மகிழ்ந்த அந்த குழந்தைகளின் சிரிப்பையும்அவர்கள் குடும்பத்தினரின் ஆனந்த கண்ணீரையும் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆனந்த கண்ணீரை விட வேறு என்னசிறப்பான பரிசாக இருக்க முடியும்..?

Leave a Reply

Your email address will not be published.

four × 5 =