கேரள பேரழிவு – இணைந்து நிற்போம், மீட்டிடுவோம் – சத்குருவின் வேண்டுகோள்

சத்குரு:

கேரளாவில் பேழிவுகரமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாரா சூழ்நிலையை மிகுந்த கவனத்துடன் நாம் கையாளவேண்டும். அனைத்து தன்னார்வத் தொண்டர்களும் களப் பணிக்குள் இறங்காமல், ஏஜென்சிகள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கு தொந்தரவு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஏஜென்சிகளுடன் இணைந்து வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மறுவாழ்வு பணிகள் சிறப்பாய் நடந்திட இந்த தேசத்தில் உள்ள அனைவரும் உதவிடுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், பெருகி வரும் நீரும், தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் மழையும்தான் தற்போதைய ஆழந்த கவலையாய் உள்ளது.

அனைவருக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியும் – ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், குறிப்பாக இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு படையும் மிக அதிகளவில் செய்யமுடியும். ஏனென்றால், இராணுவ தரத்திலான தலையீடு இதற்கு தேவைப்படுகிறது. உணவு வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், வீடிழந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்குதல் போன்ற செயல்கள் தவிர, இப்பேற்பட்ட ஒரு பாதிப்பினை பொதுமக்களால் கையாள இயலாது. ஆனால், உண்மையான தலையீடுகள் இராணுவ நிலையில்தான் நிகழவேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் பிரதமர், முதலமைச்சர் உட்பட, கேரள மக்களின் துயர் துடைக்க வேண்டிய ஆதரவினை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நிச்சயம் உங்களுடன் இருக்கிறோம்.

நான் மீண்டும் ஒருமுறை தன்னார்வத் தொண்டர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்… வெறுமனே காரியத்திற்குள் புகுந்து உங்கள் வாழ்வையும் மேலும் பல உயிர்களையும் ஆபத்திற்கு உள்ளாக்காதீர்கள். தற்சமயம், களத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஏஜென்சிகளுடன் இணைந்து நீங்கள் பணபுரிவது மிக முக்கியம். அனைவருமே காரியத்திற்குள் புகுந்து மேற்கொள்ளக் கூடிய பணி இதுவல்ல.

அடுத்த ஒரு மாதத்திற்கு, நம் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும், ஈஷா யோக மையத்தில் உள்ளவர்களும், திங்கட்கிழமை இரவுகளில் உணவு தவிர்ப்பதன் மூலமும், இன்னும் சில விஷயங்களைச் செய்வதன் மூலமும் சேமிப்புகள் செய்து நம்மால் இயன்ற வகைகளில் உதவுவோம். இது நாம் அளிக்கக்கூடிய உறுதியாக இருக்கட்டும்.

ஏற்பட்டுள்ள சேதங்களுடன் ஒப்பிடும்போது, நாம் வழங்கக்கூடிய பொருளாதார உதவிகள் சொற்பமாக இருக்கக்கூடும். ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கேரளத்து மக்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பது. எல்லைகள் கடந்து இது நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் – தண்ணீர் வற்றியபின், தமிழக மக்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கு சென்று, கேரளாவின் மறுமலர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களால் முடிந்த விதத்தில் எல்லாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த பேரழிவுமிக்க சூழ்நிலையில் – மொழி, ஜாதி, இன வேறுபாடுகள் கடந்து, நாம் ஒன்றிணைந்து, களத்தில் என்ன செய்யமுடியும் என்று பார்க்கவேண்டிய நேரமிது.

 

Leave a Reply

Your email address will not be published.

16 − twelve =