கூத்தன் திரை விமர்சனம்

கதை என்ன..?

கூத்தன் என்றாலே கலைஞன் தான். இது நடன கலைஞர்களை பற்றிய கதை.

நாயகன் ராஜ்குமார் தன் அம்மா ஊர்வசியுடன் ஒரு காலனியில் வசிக்கிறார். இவர்களுடன் 35 குடும்பங்கள் வசிக்கிறது.

ஊர்வசி ஒரு சினிமா துணை நடிகை. நாயகன் ராஜ்குமார் சினிமா வாய்ப்பு தேடி அலையும் கலைஞன். கூடவே நடன குழுவையும் நடத்தி வருகிறார்.

இவர்களைப் போல் நாயகி ஸ்ரிஜிதாவும் அவரது அக்காவும் ஒரு வீட்டில் பாரம்பரிய முறைப்படி பாரதநாட்டிய நடன பள்ளி நடத்தி வருகின்றனர்.

மற்றொரு அணி நாகேந்திர பிரசாத் அணி.

நாயகன் வசிக்கும் அந்த ஒட்டு மொத்த காலனியை காலி செய்ய சொல்கிறார். அந்த இட உரிமையாளர். இல்லையென்றால் ஒரு கோடி பணத்தை கொடுத்துவிட்டு அந்த இடத்தில் வசிக்க சொல்கிறார்.

அதுபோல் நாயகிக்கும் தங்கள் அடமான வீட்டை மீட்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

அப்போது உலகளவில் நடக்கும் போட்டியில் இந்த நடன குழுக்கள் கலந்துக் கொள்ள செல்கிறார்கள்.

யார் ஜெயித்தார்? நிலத்தை மீட்டார்களா? வில்லன் நாகேந்திர பிரசாத் ஏதாவது சதி செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிச்சவங்க எப்படி..?

நாயகன் ராஜ்குமார்  நல்ல உயரம். நல்ல டான்ஸ். ஆனால் நடிப்பில் முதிர்ச்சி தேவை. ரொமான்ஸ் வரவில்லை.

ஸ்ரிஜிதா, சோனால், கீரா என 3 நாயகிகள். கொடுத்த கேரக்டரை நன்றாக கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாகேந்திர பிரசாத் இதில் நடனமாடியுள்ளார்.

32 டேக் வாங்கும் சீனியர் துணை நடிகையாக ஊர்வசி. படத்திற்கு இவர் மிகப்பெரிய பலம். இவரும் இல்லை என்றால் சோதனைதான்.

நம்ம ஹீரோ இவரின் மகன் இல்லை என்றும் சொல்லும் அந்த ப்ளாஷ்பேக் ஏன்? நாயகியிடம் அனுதாப பெற வைத்த காட்சி போல் உள்ளது.

படத்தில் சில நடன காட்சிகள் நடன ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. ஆனால் மனதில் நிற்கும் படியானகாட்சிகள்  எதுவுமில்லை.

மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ். பாலாஜியின் இசையில் டி.ஆர். பாடிய கிங்கிஸ்தான் மங்கிஸ்தான் பாடல் ஆட்டம் போட வைக்கும்.

நல்ல நடனக் கதை. அதை ட்விஸ்ட் வைத்து கொடுத்திருக்கலாம். ஆனால் வழக்கமான பார்முலா கொடுத்து போரடித்துவிட்டார் டைரக்டர் வெங்கி.

மனோபாலா, பாக்யராஜ் ஆகிய திறமையான நடிகர்கள் ஏன்? இதுபோன்ற படங்களில் நடிக்கிறார்கள்? என்பதுதான் தெரியவில்லை.

கூத்தன்… கூத்தன்டா என்ற கெத்து டயலாக் பேருக்குதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *