கூத்தன் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் தளபதி ஸ்டாலினுக்கு கடிதம்…

கூத்தன் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் தளபதி ஸ்டாலினுக்கு கடிதம்…

தளபதி ஸ்டாலினுக்கு ஒரு தொண்டனின் அன்புக்கடிதம்.

தங்கத் தளபதிக்கு

தமிழின் அடிமட்ட தொண்டன் நீல்கிரீஸ் முருகனின் வேண்டுதல்.

மீளாத் துயரில் வாடும் தலைவா
நாங்கள் இருக்கிறோம் உன் பின்னால்.

நம் தலைவர் உலகம் போற்றும் ஒப்பற்ற பிறப்பு. அவரை இழந்து நம் அனைவரும் வாடும் இந்தச் சூழலில் நம்மை சீண்டும் அரசியல காழ்ப்புகளை வென்றெடுக்க வேண்டும்.
நம் தலைவர் உறையும் இடம் நம் அண்ணாவின் மடியாகத்தான் இருக்க வேண்டும். இதுவே ஒட்டுமொத்த தமிழனத்தின் உலகளாவிய விருப்பம். இதை ஒரு போதும் மாற்றக்கூடாது. இந்த அரசியலை நாம் வென்றெடுக்க வேண்டும்.

இந்த குள்ளநரி அரசியல் நம் தலைவருக்கான இடத்தை, மெரினாவை மறுக்குமானால் அதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் கொதிப்பில் உழன்று கொண்டு இருக்கிறோம். இந்த கொடியவர்கள் அரசியல் துரோகம் இழைத்ததால் நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதுவும் நமக்கு துரோகம் இழைத்தால் நாம் நம் தலைவரை மெரினாவில் உறக்கம் கொள்ள வைக்கும் வரை அவரை உறங்க வைக்க கூடாது. நாமும் உறங்க கூடாது.
அவர் மரணம் கொண்டு செல்லும் சாதாரணர் அல்ல. அவர் மாபெரும் மகான். உலகம் அழியும் வரை அழியாப்புகழ் கொண்டவர்.

உலகின் மிகப்பெரிய கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டு உங்களுக்கு ஸ்டாலின் எனப்பெயர் வைத்தார் தலைவர். அப்படிப்பட்ட கம்யூனிசத்தின் மாபெரும் தலைவர் லெனினின் பூத உடல் முழுதும் மீண்டும் உயிர்பிக்கப்படும் வாய்ப்பிற்காக பதப்படுத்தப்பட்டு பாதுகாக்க பட்டது போல் நாம் நம் தானைத்தலைவனையும் பாதுகாப்போம். இந்த அரசியல் குள்ளநரிகள் விரட்டியடிக்கப்பட்டு விரைவில் சூரியன் தமிழகத்தில் மலரும். அப்போது உலகத் தலைவர்கள் முன்னிலையில் நம் உலக தமிழ்த்தலைவனை அண்ணாவின் மடியில் உறங்க வைப்போம். இதை ஒவ்வொரு தொண்டனும் உயிரெனக்கொள்வோம்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிக்க காத்திருந்தான் பாரதி.

நம் தானைத்தலைவன் தமிழுக்கு இடமில்லையெனில் இந்த ஜகத்தினையே
எதிர்ப்போம்.

நீல்கிரீஸ் முருகன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *