எம் ஆர் ராதா காலமான நாள்

எம் ஆர் ராதா காலமான நாள்

திரைப்பட நடிகர்கள் எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வமான விஷயம். எம்.ஆர்.ராதா வெறும் நடிகராக மட்டுமில்லாமல் மிகச் சிறந்த கார் ஓட்டுனர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியனாக இருந்தார். அந்தக் காலத்தில் எந்த புதிய கார் மார்கெட்டுக்கு வந்தாலும் மறுநாள் அந்த கார் அவர் வீட்டு போர்டிகோவில் நிற்கும் அந்த அளவிற்கு கார் விரும்பியாக அவர் இருந்தார்.

அவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அவர் நாடகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். நிறைய புத்தகங்களும் எழுதியிருக்கிறார். எல்லாமே அரசியல் புத்தகங்கள்தான் “அண்ணாவின் அவசரம், “அண்ணாதுரையும் முன்னேற்ற நிலையும், “ஆறவுன்ஸ் ஆட்சியிலே, “தடை செய் இராமாயணத்தை, “இராமாயணமா கீமாயணமா, “இராமாயண சிறப்பு மலர் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

எம்.ஆர்.ராதா நிறைய புத்தகங்கள் எழுதியதைப்போல அவரைப் பற்றி மற்றவர்களும் அதிக புத்தகங்கள் எழுதியுள்ளனர். இராதாவும் தமிழ் நாடும் ராதாவுக்கு இழைத்த துரோகங்கள், வையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா ,நடிகவேள் எம்.ஆர்.ராதா இராமராஜ்யத்தில் இராதா “எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் “சுட்டாச்சு சுட்டாச்சு சுட்டாச்சு “பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.இராதா ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் அவரைப் பற்றிய ஆய்வு புத்தங்கள் வந்து கொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *