பாஸ் மார்க் பெறும் மாஸ் படமே… மாரி2 விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ்கிருஷ்ணாசாய்பல்லவிவரலட்சுமிரோபோ சங்கர்வினோத்டோமினோ தாமஸ்அறந்தாங்கி நிஷா,சங்கிலி முருகன் மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி மோகன்
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டர் – பிரசன்னா ஜிகே
தயாரிப்பு – தனுஷ்

கதைக்களம்

மாரி முதல் பாகத்தில் ரவுடியாக அலப்பறை செய்வார் தனுஷ்.

அந்த முதல் பாகத்தில் சண்முகராஜன் இறந்துவிடுவார். அவரின் மகனாக கிருஷ்ணா இந்த படத்தில் கலை என்ற பெயரில் வருகிறார்.

இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர்.

இதனிடையில் சிறையில் இருக்கும் வில்லன் டோவினோ தாமஸ் முன் பகை காரணமாக இவர்களை பிரித்து கொல்லதிட்டமிடுகிறான்.

ஒரு சூழ்நிலையில் தன் காதலி, குடும்பம் என எங்கோ காணாமல் செல்கிறார் மாரி.

அவர் என்ன ஆனார்? என்பதே யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பின்னர் 8 வருடங்களுக்கு பிறகு மற்றொரு பிரச்சினைக்காக மாரி மீண்டும் அவதாரம் எடுக்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

நடிகர் நடிகைகள் எப்படி..?

மாரி என்றால் மாஸ். என்பதை இந்த படத்திலும் வச்சி செஞ்சிருக்கார் தனுஷ்.

அதே வழக்கமான அடி தடி, பன்ச் டயலாக் என மாஸ் காட்டியிருக்கிறார்.

நீ கெட்டவன்னா நான் உங்க அப்பன்டா என டயலாக் எல்லாம் பேசி அனல் பறக்க விடுகிறார் தனுஷ்.

ஆனால் முதல் பாகத்தில் இருந்த புறா பந்தயம் இதில் ஒரு துளி கூட இல்லை. அதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

இதில் வரலட்சுமிக்கு பெரியதாக வேலையில்லை. அட்வைஸ் செய்வது போல வந்து செல்கிறார்.

துனுஷ்க்கு இணையாக அலப்பறை செய்துள்ளார் சாய்பல்லவி.

அராத்து ஆனந்தியாக கலக்கல். ஆனால் படத்தில் மேக்கப் அப் இல்லையே என்னவோ? முக க்ளோசப்பில் சரியில்லை.

அறந்தாங்கி நிஷாவும் மற்றொரு பெண் ஆட்டோ டிரைவராக வருகிறார். ஆனால் சிரிப்பு இல்லை.

தனுஷுக்கு அடியாளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத். சில இடங்களில் மட்டும் இவர்கள் சிரிக்க வைக்கின்றனர்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் இதில் வில்லனாக நடித்துள்ளார்.

ரவுடியாகவும் அரசியல்வாதியாகவும் ரசிகர்களை கவர்ந்தாலும் நிறைய பேச்சு.

தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி?

முதல் பார்ட்டில் அனிருத் அசத்தியிருப்பார். ஆனால் இதில் யுவன் அசத்தல் குறைவே.

ரவுடி பேபி உள்ளிட்ட ஓரிரு பாடல்கள் பார்க்கலாம்.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் தங்களில் பணிகளில் சிறப்பான பணி.

முதல் பாகத்தில் மாஸ், ஆக்சன் என கெத்து காட்டிய டைரக்டர் பாலாஜி மோகன் இதில் மாரிக்கு குடும்பம் பொண்டாட்டி குழந்தை என வேறு ஒரு கதைக்களம் கொடுத்துள்ளார்.

அது கொஞ்சம் ரசிக்கவும் வைத்துள்ளது.

மாரி 2… பாஸ் மார்க் பெறும் மாஸ் படமே..

 

Leave a Reply

Your email address will not be published.

4 × two =