ஜீவா–அருள்நிதி இணையும் படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன்
அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.
இதனையடுத்து சத்ரியன், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது தேவராட்டம் படத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா.
இதனையடுத்து ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.
ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா நடிக்கிறாராம்.
அருள்நிதிக்கு ஜோடி தேடும் படலம் நடந்து வருகிறது.
குறும்பட இயக்குனர் ராஜேஷ் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.