ரஜினி காட்டும் மரண மாஸ்; “பேட்ட” படத்தில் தலைவர் குத்து
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.
மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான பேட்ட பட போஸ்டரில் சிங்கிள் ட்ராக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் மரண மாஸ் என்பது பாடல் வரிகளாகும். இது தலைவரின் குத்து என்று டிசைன் செய்துள்ளனர்.