விஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்கள்..;மதுரை-கோவையில் சர்கார் நிறுத்தம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று முன்தினம் தீபாவளியன்று ரிலீஸானது.

இப்படத்தில் அரசியல்வாதிகளின் தில்லு முல்லுகளை அப்பட்டமாக காட்டியிருந்தன.

மேலும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையிலும் சில காட்சிகள் இருந்தன.

அதாவது கலைஞர் ஆட்சியில் வழங்கிய டிவி, ஜெயா ஆட்சியில் வழங்கி டிவி, மிக்ஸி உள்ளிட்ட இலவச பொருட்களை மக்கள்தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் இருந்தன.

அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தை இது அவமதிப்பாக கூறி இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரையில் அதிமுக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் சர்கார் படம் திரையிட்டுள்ள திரையரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மதுரையிலுள்ள அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா,மினிபிரியாசுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் சர்கார் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும் வன்முறையை தூண்டிவிடுவதாக கூறி விஜய், முருகதாஸ் மீது வழக்குகளை தொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.

fifteen − 1 =