சர்தார் வல்லபாய் சிலையில் மோடி தான் மறைந்திருக்கிறார்.. ; சீறும் சித்தார்த்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவே உலகத்தின் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாதுபேட் என்ற தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்த சிலையை இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
 இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில்…
“இந்தியாவின் பெருந்தலைவரை போற்றுகிறோம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விரயமான அவமதிக்கும் வகையில் குஜராத்தில் இன்று சிலை திறப்பு நடைபெறுகிறது.
படேலை தேர்தல் கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறது பாஜக. சர்தாரும் விவசாயிகளுக்கும் இன்னும் அதிகமான மரியாதை தேவை.
இந்த சிலை படேல் உடையது அல்ல அதில் மோடிதான் மறைந்திருக்கிறார்” என பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

Leave a Reply

Your email address will not be published.

19 + seventeen =