“ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்து மான்ஸ்டர் என்ற புதிய படத்தை இயக்குகின்றார்

மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். 
 
மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு கோகுல் பினாய் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ஷங்கர் சிவா. 
 
படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *