மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரை விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரை விமர்சனம

நடிகர்கள்: துருவா, ஐஸ்வர்யா தத்தா,அஞ்சனா கீர்த்தி, ராதாரவி, மைம் கோபி,அருள்தாஸ், ராம்ஸ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – ராகேஷ்
இசை – அச்சு ராஜமணி
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
எடிட்டிங் – சான் லோகேஷ்
தயாரிப்பு : மதியழகன் ரம்யா

செயின் திருட்டு இந்த செய்தியை நாம் தினம் தினம் பார்க்காமல் ஒரு நாளை கூட கடக்க முடியாது. அதுவும் நகரங்களில் செயின் பறிப்பு திட்டங்களை சில படித்த இளைஞர்களே செய்து வருகின்றனர்.

இது போன்ற சம்பவத்தால் தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை படத்தின் நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்பட கதை.

நடிகர் நடிகைகள் பற்றிய பார்வை…

படத்தின் நாயகன் துருவா. பெயருக்கு ஏற்ற போல நன்றாக துருதுருவென இருக்கிறார்.

கேஸ் சிலிண்டர் போடும் பையன், அன்பான மகன், பொறுப்பான கணவன், காதலியை கண்காணிக்கும் இளைஞன், ரவுடிகளை துவம்சம் செய்யும் வாலிபன் என அனைத்திலும் கச்சிதம்.

ஐஸ்வர்யா தத்தா மற்றும் அஞ்சனா கீர்த்தி என இரண்டு நாயகிகள். இருவரும் செம க்யூட். அலட்டிக் கொள்ளாத நடிப்பில் இருவரும் அசத்தல்.

ப்ளாஷ் பேக்கில் வருகிறார் அஞ்சனா கீர்த்தி. இறுதியில் அனுதாபத்தை பெறுகிறார்.

கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்கிறார்சரண்யா பொன்வண்ணன்.  ப்ளாட் வாங்க சென்று ஓசி சோறு சாப்பிடும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மைம் கோபி, ராம்ஸ், அருள்தாஸ் எனஅனைவரும் மிரட்டும் வில்லன்கள்.

ட்ரைலரில் ராதாரவிக்கு பயங்கர பில்டப்.ஆனால் படத்தில் ஒன்றுமில்லை.

போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஜேடி சக்கரவர்த்தி. கம்பீரம் குறைவு.

தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய பார்வை

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில்இரவு காட்சிகள் அருமை. செயின் பறிப்பு காட்சிகளில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.

அச்சு ராஜாமணி இசையில் எனக்கு என்னாச்சு பாடல் கேட்கலாம்.

ராத்திரி 12 மணிக்கு நகை போட்டுதனியாக ஒரு பெண் நடக்கும் நாளேஉண்மையான சுதந்திர தினம் என மகாத்மா கூறியிருந்தார்.

ஆனால் இன்று பகல் 12 மணிக்கேபெண்கள் நகை போட்டு நடக்கபயப்படுகிறார்கள். என படத்தை முடிக்கிறார் டைரக்டர் ராகேஷ்.

மொத்தத்தில் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. தங்க மங்கைகளேஉஷார்

 

Leave a Reply

Your email address will not be published.

12 + three =