ட்விட்டர் ஆலோசகராக ஏ.ஆர். ரஹ்மானை நியமிக்க திட்டம்
பிரபலங்கள் ஏதேனும் ஒரு கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் தற்போது செய்தியாளர்களை சந்திப்பதில்லை.
தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அவர்களின் கருத்தை பதிவிடுவார்கள்.
இதனால் நிறைய பேர் அவர்களை ட்விட்டரில் பின் தொடருவது வழக்கம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.
இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியமான நபராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.
இந்நிலையில் இந்தியா வந்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சியும் ஏ.ஆர்.ரஹ்மானும் சந்தித்து பேசி உள்ளனர்.
இந்தியாவில் ட்விட்டரில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதை அறியவே ஜேக் இந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருக்கிறார்களாம்.
இந்தியாவின் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.