நக்கீரன் கோபாலை விடுதலை செய்க – தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை வரை தொடர்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த ஆய்வு கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. நக்கீரன் கோபால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் இந்திய குற்றவியல் சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நக்கீரன் கோபால் மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *