பிங்க் ரீமேக்கில் தல 59 படம்.; அஜித்துடன் இணையும் நஸ்ரியா.?

விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 59 என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தல 60 படத்தையும் வினோத் இயக்குகிறார்.

இந்த இரண்டு படங்களையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இதில் தல 59 படமானது ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடிக்கிறார். இந்நிலையில் டாப்சி நடித்த வேடத்தில் திருமணமான மலையாள நடிகை நஸ்ரியா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *