விஜய்யுடன் மோதும் அஜித் ரசிகன் ஆர்.கே.சுரேஷின் உருக்கமான வீடியோ
விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் தீபாவளியன்று ரிலீஸாகிறது.
இதே நாளில், அஜித் ரசிகராக RK சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படம் சர்கார் படத்துக்கு போட்டியாக திரைக்கு வருகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து மோசமான விமர்சனங்கள் வந்தன.
மேலும் எங்க தல சிங்கம் பாடலையும் கலாய்த்தனர்.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக நடிகர் RK சுரேஷ் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில்…
“இந்த படத்திற்காக பலகோடி செலவு செய்து, ஒரு வருடத்திற்கும் மேல் உழைத்துள்ளோம்.. ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்.
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ட்ரைலர் கட் செய்து வெளியிட்டோம். நாங்கள் நினைத்திருந்தால் நல்ல இரண்டு மூன்று சீன்களை எடுத்து போட்டு வெளியிட்டு மக்களை ஈர்த்திருக்கலாம். அதில் உடன்பாடில்லை” என RK சுரேஷ் உருக்கமாக வெளியிட்டுள்ள வீடியோவில் கேட்டுள்ளார்.