சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா..? கமல்-ரஜினி கருத்து

கேரளாவிலுள்ள சபரிமலை சந்நிதானத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது.
அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை ஒரு அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
ஆனாலும் பலர் இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி & கமல் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…
“சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என கமல் தெரிவித்துள்ளார்.
“சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் சபரிமலை  ஐதீகத்தை பின்பற்ற வேண்டும்.
மீ டூ பரப்புரை பெண்களுக்கு சாதகமான ஒன்று, ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது.” என ரஜினி தெரிவித்துள்ளார்.
இன்று ஒரே நாளில் இருவரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

three × four =