சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; முதல் மரியாதை பட ரஞ்சனி எதிர்ப்பு

கடலோரக் கவிதைகள், உரிமை கீதம், முதல் மரியாதை, உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் மலையாளபடங்களிலும் நடித்தவர் ரஞ்சனி.

கேரளாவைச் சேர்ந்த இவர் சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி  என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு இவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வட இந்தியர்களுக்கு நாம் வழிப்படும் ஐய்யப்பனை தெரியாது, மேலும் அவர்களுக்கு நமது வழிபாட்டு முறைகளும் தெரியாது.

எனவே வழிபாடு முறைகளை தெரிந்த ஒரு தென்னிந்திய நீதிபதி ஒருவரை அந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

சபரிமலையில் பெண்கள் அனுமதி என்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து போராடவில்லை என்றால் நமது கலாசாரமும், பாரம்பரியமும் அழிந்து விடும்.

இதற்காக தொடங்கப்பட்டு உள்ள ‘ரெடி டூ வெயிட்’ என்ற பிரசார இயக்கத்தில் நானும் சேர்கிறேன். இதில் பாலின பாகுபாடு இல்லை. நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.” என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *