முக்கிய செய்திகள்

🚨 *பிக் நியூஸ்* 🚨 21/08/18 !

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இஃபான், ஆசிஃப் ஆகிய 2பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் : மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் அதிரடி.

கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தேர்வு நடைபெறும் – மத்திய அரசு.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி இல்லை – மத்திய அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணை – உச்சநீதிமன்றம்.

கருணாநிதி என்னிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன விரைவில் என்னுடைய முழு பலத்தையும் நிரூபிப்பேன் – முக.அழகிரி.

241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதிகபட்ச நிவாரணம் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டுள்ளன – சத்யகோபால் IAS.

வெள்ளத்தால் பாதித்துள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70லட்சம் நிவாரண உதவி.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

காவல் துறையில் விசாகா கமிட்டி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது – கனிமொழி.

சென்னை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றினால் விரைவாக செல்லலாம்.8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்.

வெள்ள பாதிப்பை சீர்செய்ய 5 ஆண்டுகளுக்கான பட்ஜெட் நிதி தேவை : பினராயி விஜயன்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரலாறு தெரியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் : அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி போராட்டம் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் : உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களை விசாரிக்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா – அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

வதந்தி பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் நிறுவன சிஇஓவுடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் பேச்சுவார்த்தை.

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு.

கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

தண்ணீர் வீணாவதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்.

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி, அதே துறையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்.

இயற்கை பேரிடரில் இருந்து கேரள மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன் – குடியரசுத் தலைவர் & பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது அவசியமற்றது அதிக மாசு மற்றும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிக்கலாம் – வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரை ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியதால் பரபரப்பு.

திருமுருகன் காந்தியின் கைதை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் – ஆட்கொணர்வு மனுவில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி தள்ளுபடி.

திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்றது – அமைச்சர் ஜெயக்குமார்.

கேரள கனமழையால் ஆலப்புழா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது : ஆலப்புழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்; நெடுமுடி, காலாப்புட்டு, புட்டுநாடு உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.

நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்வது தவறு மனிதநேயத்துடன் அணுக வேண்டும் : தமிழிசை சவுந்தரராஜன்.

கர்நாடகாவில் கூர்க் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 2 மாத குழந்தையை காப்பாற்றிய மீட்புப் படையினர்.

கேரள வெள்ள நிவாரண நிதியாக எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் – பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு.

காவிரி பவானி ஆற்றில் வெள்ளம் செல்பி எடுத்த 20 பேர் மீது வழக்கு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக குறைவு :நீர்வரத்து குறைந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு ஆனது 80 ஆயிரம் கனஅடியாக குறைப்பு.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடி, நீர் இருப்பு 30.3 டிஎம்சி, நீர்வரத்து 8,413 கனஅடி, நீர்திறப்பு 8,000 கனஅடி.

  1. திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் : மத்திய அரசின் நில அறிவியல் துறை முடிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *