முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் , இதய துடிப்பு குறைகிறது.
கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால் செயற்கை சுவாசத்தில் உள்ளார் என்று காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து முக்கிய செய்திக்குறிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.

காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : அதிரடி படையினர் மற்றும் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவேரி மருத்துவமனை வளாகத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகள் – முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கருணாநிதியின் உடல்நிலை கவலை அளிக்கிறது உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் – டிடிவி.தினகரன்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு அக்.8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

திருச்சி விமானநிலைய தங்கம் கடத்தல் விவகாரம் : 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

சென்னை பெரியார் திடலில் இன்று மாலை கி.வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைப்பு.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இருந்து முக.அழகிரி , முக.ஸ்டாலின் புறப்பட்டனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் : ராகுல்காந்தி.

நோயுடன் போராடி வருகிறார் கருணாநிதி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது – கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்.

கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது, இது குறித்து பேச பிரதமர் மறுக்கிறார் – டெல்லியில் காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலார்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை : அமைச்சர் தங்கமணி.

நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கிறது.
நாளொன்றுக்கு 4 சம்பவங்கள் நடப்பதாக குற்ற ஆவணக் காப்பக அறிக்கை கூறுகிறது; என்ன நடக்கிறது நமது நாட்டில்? – உச்சநீதிமன்றம் கவலை.

அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு : கேகே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எந்த கட்சி போட்டியிட்டாலும் அதிமுக தான் வெற்றி பெறும்.தமிழக வாக்காளர்கள் மீண்டும் டோக்கனுக்கு ஏமாற மாட்டார்கள் : அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

மதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் சிலர், திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினை கேலி செய்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற செயல்களில் ஈடுபடும் மதிமுகவினருக்குக் கட்சியில் இடம் இல்லை – வைகோ.

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நடிகர் வடிவேலு வருகை.

நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சுவார்த்தை.

சென்னை புழல் சிறையில் போர்ச்சுகல் நாட்டு கைதி தற்கொலை முயற்சி.

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ராமன் கோட்டகம் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 11 இடத்தில் 66 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியினை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *