இன்றைய முக்கிய செய்திகள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது ஏன் என்பதற்கான தமிழக அரசின் பதிலில் தெளிவில்லை – நீதிபதிகள் கருத்து.

மத்திய அரசு விதிகளின்படி இடம் வழங்க எந்த தடையும் இல்லாதபோது அனுமதி மறுப்பதேன் ? – திமுக தரப்பு வாதம்.

மெரினா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 5 மனுதாரர்கள் தங்கள் வழக்கை வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்களின் மனுக்களை தள்ளுபடி செய்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது – தமிழக அரசு.

அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்கவில்லை – தமிழக அரசு.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ்.

கருணாநிதிக்கு காந்தி மண்டபம் முன்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாததற்கு மத்திய அரசின் விதிகளே காரணம் : தமிழக அரசு.

அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம்.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை – திமுக சார்பில் வாதம்.

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியது அரசின் கொள்கை முடிவாகும் – தமிழக அரசு.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது : தமிழக அரசு.

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் : டிராபிக் ராமசாமி.

திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் தரக்கூடாது – ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எஸ்.குருமூர்த்தி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும்.டெல்லி உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் – மத்திய அரசு.

தமிழகம், புதுச்சேரியில் இன்று பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி

கருணாநிதி தமிழக தலைவர் மட்டுமல்ல தேசிய அளவிலான தலைவர் : உம்மன்சாண்டி.

கலைஞர் எனக்கு தலைவன் மட்டுமல்ல ஒரு நல்ல தகப்பனும் தான் – டி.ராஜேந்திரன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் அஜீத் மற்றும் ஷாலினி அஞ்சலி.

கலைஞரை போன்ற மாபெரும் தலைவன் இனி கிடைக்க போவதில்லை – நடிகர். விவேக் உருக்கம்.

கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பெரும் இழப்பு – முதல்வர் பழனிசாமி அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *