இன்றைய முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தது தமிழக அரசு.

பாரத் பந்த் : இந்தியா நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் இது போன்ற உத்தரவை பிறப்பித்தது எப்படி ? – உச்சநீதிமன்றம் கேள்வி

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுத்தாக்கல்

2018ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்படும் – ராஜஸ்தான் முதல்வர்.

மத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் : டிடிவி தினகரன்.

அனைத்து பிரச்னைகளுக்கும் பிரதமர் மோடி மவுனமாக இருலக்கிறார் – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.

தேனி : காவல் உயரதிகாரிகளை செல்போனில் மிரட்டிய பிரபல ரவுடி புல்லட் நாகராஜ் பெரியகுளத்தில் கைது.

திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் – மதுரை ஆதீனம்.

சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும்.
தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார் – மதுரை ஆதீனம்.

நித்யானந்தா தரப்பால் அச்சுறுத்தல் இருக்கிறது; அவர் மீண்டும் ஆதீன மடத்திற்குள் வர இயலாது.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் ஊழலை ஒழிக்க முடியாது – மதுரை ஆதீனம்.

அதிமுகவில் கருத்து மோதல் இருந்தாலும் எதிரிகள் வந்தால் பந்தாடிவிடுவோம் – அமைச்சர் செல்லூர் ராஜூ.

சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங். தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி.

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – தமிழிசை சவுந்தர‌ராஜன்.

7 பேர் விடுதலைக்கான பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் – சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி.

முழுஅடைப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆட்டோக்கள் லாரிகள் ஓடவில்லை.

குஜராத்தில் முழுஅடைப்பை தொடர்ந்து சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கினார்.

பாரத் பந்த் காரணமாக, கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தம். அதேபோல கோவை, பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.

ஒடிசா : புவனேஸ்வரில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்தும் சாலையில் அமர்ந்தும் போராட்டம்.

தெலங்கானா : ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்.

குமரி மாவட்டம் பகர்கோவிலில் 11 அரசுப்பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.

மார்த்தாண்டம், தக்கலை, கொற்றிகோடு, புதுக்கடை, குலசேகரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் பேருந்துகள் மீது கல்வீசி தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை.

முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடல்.

முழுஅடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.

மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் – கிரண்பேடி.

கைவிடப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி 30 கோடி ரூபாய் மதிப்பிலான 600 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகளை கண்டறிந்த ஐஜி பொன் மாணிக்கவேல் குழுவினர்.

திருச்சியில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம். அங்கு தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரின் காவல் நீட்டிப்பு.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக கைதான புல்லட் நாகராஜிடம் விசாரணை ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டு சிக்கியது – 2000, 500,100 நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைப்பு.

நாமக்கல்: பேளுக்குறிச்சி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.

மேட்டூர் அணை நீர் திறப்பு 15,800 கனஅடியில் இருந்து 20,800 கனஅடியாக அதிகரிப்பு.

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு.

குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.

கிருஷ்ணகிரி், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *