இன்றைய முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை சென்னை மாநகர் முழுவதும் உச்சகட்டப் போலீஸ் பாதுகாப்பு.

ஜம்மு-காஷ்மீர் குரிஸ் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் : பாதுகாப்பு படையினர் நடத்திய மறு தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

ஆக. 9-ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்.

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வருகை.

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவனை ஜம்மு போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை : நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சமாளிப்பது குறித்து கூட்டத்தில் விவாதம்.

சிலை கடத்தல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் : ஒரு நிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதியில்லாத அரசாணை என நீதிபதிகள் கருத்து.

ராஜரத்தினம் அரங்கில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையினர் குவிப்பு.

விழுப்புரத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை டிவி யில் பார்த்த அதிர்ச்சியில் திமுக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு.

சென்னை தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : தமிழகத்தில் நடைபெறும் உயர்மட்ட மேம்பாலம், சாலை பணிகள் பற்றி நிதின் கட்கரியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்.

மரக்காணம் : தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக மரக்காணத்தில் தனியார் பேருந்துகள் லாரிகள் இயங்கவில்லை ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக தொடர் சோதனை.

நாகரசுநல்லூர்ல் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூங்கிகொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி கட்டடங்கள் மற்றும் கிளை நூலக கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் தாறுமாறாக சென்ற கார் மோதி படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கறிஞர் ரீகனை கைது செய்தது காவல்துறை.

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விசா பெறுவதில் விலக்கு : சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க.

டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்.

கூடலூர் அருகே ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபீ எடுத்த 5 பேர் கைது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,633 கனஅடியில் இருந்து 10,429 கனஅடியாக குறைந்தது : அணையின் நீர்மட்டம்- 118.61 அடி, நீர்இருப்பு- 91.27 டிஎம்சியாக உள்ளது.

பழனி முருகன் கோவிலில் கூட்ட நேரத்தில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது கார் மற்றும் எட்டு பவுன் நகை பறிமுதல்.

மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேசலு பணியிடை நீக்கம். சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை.

திருச்சி விமான நிலைய முறைகேட்டில் கைதான 6 பேர் பணியிடை நீக்கம்.

இதுவரை நடந்த சிபிஐ சோதனையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்.

மதுரை விமான நிலைய துப்புரவு பணியாளர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *