ஜெயலலிதா நினைவு நாளில் IRON LADY பர்ஸ்ட் லுக்; நித்யா மேனன் நடிக்கிறார்

சிறந்த நடிகையாக பிரபலமாகி பின்னர் அரசியலில் நுழைந்து மிகப் பெரிய ஆளுமையாக உயர்ந்தவர் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா.
அவர்   மரணமடைந்து இன்றுடன் (5-12-18) இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
எனவே இன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு பிரபரலங்கள், அரசியல்வாதிகள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க  இயக்குனர் பாரதிராஜா,  ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனி தனி படமாக எடுக்க முன் வந்தனர்.
இதில் பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘THE IRON LADY’ என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது.
இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘THE IRON LADY’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதா தோற்றத்தில் நித்யா மேனன் படம் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *