10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019 

10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019
25.-28.சித்திரை 2019 [நான்கு நாட்கள்]
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது
நாங்கள் தமிழரென உறுதியான மனதோடு, அனுபவங்களின் வலியோடு, எண்ணப் பொறிகளின் வண்ணக் கலைகளை வடமாக்கி, தரையில் நிமிர்ந்து  நின்று உலகத் திரை நோக்கி, நண்பர்களின் துணையோடு, இந்த திரைத் தேரினை ஐந்து கண்டங்கள்  சுற்றிவர எமது உயிரே உழைப்பாக உடம்பே ஆயுதமாக 10 ஆம் ஆண்டின் பயணப் பாதையில் இழுத்துச் செல்கின்றோம்.! வானுயர எம்மை வாழ்த்தி, வடம் பிடிக்க வாருங்கள் !
தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின்  கலை கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ்  சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் உலகவலம் செய்துவருகின்றது. பத்து தசாப்தங்கள் கடந்த  தமிழசினிமாவின் ஒரு தசாப்தங்களை நாங்கள் கடக்கவிருக்கின்றோம். நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற “தமிழர் விருதுகள்” தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது  சர்வதேச திரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. சர்வதேச திரைத் திறமையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.
 
கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாத் துறையில் சாதித்தவர்கள், தமிழ்நாட்டில் வாழும் கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழ் கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், சர்வதேச மொழி பேசும் திரைப்படங்கள் என அனைத்துக்கும் தமிழர் விருதுகள் வழங்கி வந்தோம்.
 
அடுத்த ஆண்டில் இருந்து இவற்றோடு 10 சிறந்த “சாதனைத் தமிழர்கள்” என்ற விருதினையும் வழங்கி கௌரவிக்க இருக்கின்றோம். இது புலம்பெயர்ந்த எமது தமிழர்களின் புதிய பாதை ! எமது வளர்ச்சியில் அடுத்த கட்டமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சினிமா துறை தவிர்ந்த, ஏனைய துறைகளில் தனித்துவமாக சாதித்து, தடம் பதித்த தமிழர்களை இனம்கண்டு, பாராட்டி, மதிப்பளிக்க இருக்கின்றோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஐந்து கண்டங்களில் பத்து  நாடுகளைத் தெரிவு செய்து, பத்து சாதனையாளர்களுக்கு “சாதனைத் தமிழர்” என்ற சிறந்த “தமிழர் விருதுகளை” வழங்கி, மதிப்பளிக்கும் பணியினை செய்யவிருக்கின்றோம்.
தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச்  சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள்  கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்ந்தும் வளர்த்து வருகின்றது. நோர்வேயிய அரசின், ஒஸ்லோ, லோரன்ஸ்கூ நகரசபைகளின் மிகப் பெரிய அங்கீகாரத்தினை பெற்று சிறப்பான விழாவாக உருவெடுத்துள்ளது. 
2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 20 அதி சிறந்த திரைப்படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருப்பது, எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. தமிழ்ப்  படங்களின்  உயர்ந்து  வரும்  தரம்  மற்றும்  மக்களின்  வாழ்க்கை  நெறிமுறையில்  தமிழசினிமா  ஆற்றும்  வகிபாகம் அளப்பெரியது என்று நம்புகின்றோம். நான்கு நாட்கள் உயர்ந்த நாட்டில் ஒரே கூரையின் கீழே ஒன்றிணைவோம் வாருங்கள்!
நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் நான்கு நாட்கள் – நிகழ்ச்சி நிரல்:
நாள் 1: 25.04.2019 வியாழக்கிழமை  நேரம்: 17.00 மணி (Rommen Scene)
குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்
நாள்  2: 26.04.2019 வெள்ளிக்கிழமை நேரம்: 17.00 மணி (Rommen Scene)
குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்
நாள் 3: 27.04.2019  சனிக்கிழமை நேரம்: 17.00 மணி (Lillestrøm Kultursenter)
“தமிழர் விருது” வழங்கும் விழாவுடன்  நள்ளிரவுச் சூரியன் கலைமாலை.
நாள்: 4: 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம்: 13.00 மணி (Utsikten Selskaplokale)
மதிய உணவுடன், கலந்துரையாடல், விருந்தினர்கள் சந்திப்பு  – சர்வதேச திரைப்படங்கள் திரையிடல்

 
உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக, உலக அரங்கில் பேசப்படுகிறது.
இத் திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைத்ததில் , நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம், உலகத் தமிழர்களுடன் இணைந்து  பெருமிதம் அடைகின்றோம். இத் திரைப்படவிழாவை அடுத்த படி நோக்கி நகர்த்துவது உங்கள் பொறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *