நாட் ரீச்சபிள் திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம் – இயக்குநர் சந்துரு

Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா  பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது…
இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்து செய்ததே பெரிய விஷயம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம். இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம், எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார்.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது…
எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ லாஞ்ச் நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்த படத்திற்கு ஒரு பாடல் தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழுதாய் கூறும் படி இருக்கும்.  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஷ்வா பேசியதாவது…
இந்த படத்தின் இயக்குநர் மிகவும் திறமை வாய்ந்தவர், அவருடைய ஐடியாக்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பு மூலம் படத்தை மெருகேற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.

நடிகை சுபா பேசியதாவது..
இந்த திரைப்படம் இயக்குநர், இசையமைப்பாளருக்கு முதல் படம், ஆனால் படம் அப்படி இருக்காது. நேர்த்தியான ஒரு படமாக இருக்கும். நான் இங்கு இருப்பதற்கு என் அம்மா தான் காரணம் அவருக்கு நன்றி. நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் இருந்து, இப்போது வரை மக்கள் மனதில் எப்படியாவது பதிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நிறைய சின்ன கதாபாத்திரங்களை கூட  எடுத்து நடித்து வருகிறேன். ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

நடிகர் கார்த்திக் பேசியது…
நாட் ரீச்சபிள் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தின் டீசர் நன்றாக இருந்தது. பாடல் நன்றாக இருந்தது. எவ்வளவு பதட்டம் இருக்கும்  என எனக்கு தெரியும். நல்ல படம் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதை சின்ன படங்கள் தான் நிரூபித்தது. நம்பிக்கை தந்தது அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என் வாழ்த்துகிறேன் நன்றி.

Leave a Reply

Your email address will not be published.

five − three =