ஓடு ராஜா ஓடு – திரை விமர்சனம்

ஓடு ராஜா ஓடு, ஓடு ராஜா ஓடு விமர்சனம், ஓடு ராஜா ஓடு குரு சோமசுந்தரம், ஓடு ராஜா ஓடு லட்சுமி நாசர், செட்டப் பாக்ஸ் கதைகள்

கேண்டிள் லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் தயாரித்துள்ள படம் `ஓடு ராஜா ஓடு’.

ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் நாயகனாக நடிக்க, நாசர், லட்சுமி பிரியா,ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன்,வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தொகுப்பு – நிஷாந்த் ரவிந்திரன்

இசை – தோஷ் நந்தா
ஒளிப்பதிவு – ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே.,
தயாரிப்பு – விஜய் மூலன்
இயக்கம் – நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ்.

மக்கள் தொடர்பாளர் : ராஜ்குமார்

பட வெளியீடு : பிடி. செல்வகுமார்

கதைக்களம்..

இப்படத்தில் நான்கு கதைகள் உள்ளன. அந்த நாலு கதைகளின் கேரக்டர்களின் அறிமுகமே படத்தின் பாதியை மிஞ்சி விடுகிறது.

அந்த நாலு கதைகளை ஒன்றாக இணைத்து ஓடு ராஜா ஓடு என ஓட விட்டு இருக்கிறார் டைரக்டர்.

கதை1

லட்சுமி ப்ரியாவின் கணவர் குரு சோமசுந்தரம் ஒரு திரைக்கதை எழுத்தாளர். சினிமா வாய்ப்புக்காக காத்திருக்க, இவருக்கு செட்டப் பாக்ஸ் வாங்கி வர அனுப்புகிறார் லட்சுமி.

அவரிடம் பணமில்லை என தெரிந்தும் மனைவிக்காக கணவன் இதை செய்ய வேண்டும் என அனுப்புகிறார்.

எனவே தனது நண்பர் பீட்டருடன் செட்டப் பாக்ஸ் வாங்க செல்கிறார் குரு.

இதனிடையில் ஒரு பொட்டியை மாற்றி கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதால் அங்கு சென்று பணப் பெட்டியை வாங்குகின்றனர்.

ஆனால் அந்த பணத்தை ரோட்டில் உள்ள ஒரு சிறுவன், சிறுமி இவர்களுக்கு தெரியாமல் எடுத்து செல்கின்றனர்.

கதை 2…

பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமானசெல்லமுத்து.

கதை 3

மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த்சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்துதிட்டம் தீட்டுகிறார்.

கதை 4ல் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்),வருகின்றனர்.

இறுதியில் என்னதான் நடந்தது? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அழகான மனைவி லட்சுமிக்கு பயந்து குரு சோமசுந்தரம் படும் அவஸ்தைகளை கணவன்மார்கள் படும் கஷ்டத்தை படு யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தன் வீட்டுக்கு செட்டப் பாக்ஸ் வாங்கி வந்த பின் வீட்டில் இருந்து ஒரு ஆண் செல்வதை பார்க்கும் போது குழம்பி நிற்கிறார். பின்னர் மனைவியிடம் பேசி தன்னை தானே சமாதானப்படுத்தி கொள்கிறார்.

கால பைரவி லயன் என்ற கேரக்டரில் சிம்ரன். இறுதியில் ரோட்டோர சிறுமியை அழைத்து செல்கிறார். மற்றபடி நடிப்பில் வித்தியாசமில்லை.

அழகான லட்சுமி ப்ரியா நடிப்பில் கெட்டி. இவர் கர்ப்பம் என்பதையும் கணவனுக்கு பொறுப்பு வேண்டும் என்பதால் இப்படி செய்வதாக சொல்வது சென்டிமெண்ட்.

நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என அனைவரும் கச்சிதம்.

இரண்டு லவ்வருமே தனக்கு வேனும் என மற்றொரு ஆகிஷா சொல்லும்போது தியேட்டரில் சிரப்பு மழை.

படத்தில் ஒரு சில ஆண்களையும் பெண்களையும் அதற்காக அலைபவர்களாக காட்டியுள்ளது ஏனோ? தெரியவில்லை.

ஜெயிலில் இருந்த விடுதலையாகும் கணவன், அவன் நண்பன் ரெண்டு பேருமே வேனும் என ஒரு பெண் சொல்வது எல்லாம் டூ…டூ மச்.

நாசர் மனைவி சோனா பீட்டருடன் தப்பாக நடந்துக் கொள்வது ..? என்ன சொல்ல வருகிறார் டைரக்டர்? என்பது புரியாத புதிர்.

சிறுவன் சிறுமியை டாவு என்பதையாவது குறைத்திருக்கலாம். ஏற்கெனவே நாட்டில் பாலியல் தொல்லை. இதுல இது வேறையா.?

இயக்கம் பற்றிய அலசல்…

திரைக்கதை எழுதி எடிட்டிங்கை கவனித்திருக்கிறார் நிஷாந்த்.

தோஷ் நந்தா இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும் இயக்கியுள்ளனர்.

மூடர் கூடம், சூது கவ்வும், ஜில் ஜங் ஜக், போன்ற பட பாணியில் ப்ளாக் காமெடியை தர முயற்சித்துள்ளார் டைரக்டர்.

ஓடு ராஜா ஓடு… செட்டப் பாக்ஸ் டிராஜிடி

 

Leave a Reply

Your email address will not be published.

five × 2 =