டிசம்பர் 21-ல் மோதும் டாப் ஹீரோஸ்.: விலகி நின்று வேடிக்கை பார்க்கும் விஷால்.!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21ல் தனுஷ் நடித்துள்ள மாரி2, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றது.
இதில் ‘மாரி 2’ படம் கடைசியாக அறிவிக்கப்பட்டது.
இதனால், மற்ற தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 5 படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் கூட்டாக அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் பட ரிலீஸ் தேதியில் விடாப் பிடியாக உள்ளனர்.
இதனையடுத்து டிசம்பர் 21-ம் தேதி பட வெளியீட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும், அதில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் தலையிடுவதில்லை என முடிவெடுத்து இருக்கிறார்களாம்.