மரணம் என்பது வெறும் உடலின் மாறுதலே…”-ஓஷோ

விடிகாலை கடைசி நட்சத்திரமும்
மூழ்கிக் கொண்டிருந்தது…

ஒரு நண்பர் தம் உறவினரின் மரணச்செய்தியை கொண்டு வந்திருந்தார்…

அவர் என்னிடம் கேட்டார்…

“தினமும் மரணம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது…

ஆயினும் மக்கள்…
தமக்கு மரணமே ஏற்படப் போவதில்லை…

என்கிற தோரணையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்…”

நமக்கும் ஒருநாள் மரணமுண்டு என்பதை…

யாருமே நினைத்துப் பார்ப்பதில்லையே…???

“இத்தனை மரணங்களுக்கு இடையே…

இத்தகைய ‘விசுவாசம்’ ஏற்படக்
காரணம் என்ன?”

நான் கூறினேன்…

“இந்த ‘விசுவாசம்’ மிகவும் அர்த்தப்பூர்வமானது…”

“மரணிக்கும் உடலில் அமர்ந்திருப்பவன்…

மரணிப்பதில்லை…”

அது மரணத்தின் மேற்பரப்பாய் உள்ளது…

ஆனால், மையத்தில் மரணமில்லை…

“உடல், மனம் என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவன் நன்கு அறிகிறான்…

நான் உடலுக்கும், மனதுக்கும்
அப்பாற்பட்டவன் என்று…

“மரணத்தை பார்த்துக் கொண்டிருப்பவன்…

மரணமாக மாட்டான்”

அவனுக்குத் தெரியும்…

“எனக்கு மரணமில்லை…

மரணம் என்பது வெறும் உடலின் மாறுதலே…”

நான் நித்தியமானவன்…

எல்லாவித மரணங்களையும் கடந்தவன் தான் என்று…”

“இந்த அறிவானது உணர்வற்றது…”

“இதனை உணர்தலே முக்தி
அடைதலாகும்…

“மரணம்” கண் எதிரே காட்சி தருகிறது…

“அமரத்துவத்தின் ஞானமோ”
மறைவாக உள்ளது…

அதையும் பிரதட்சயமாக்கிக்
கொள்கிறவனே…

“பிறப்புமில்லை… இறப்புமில்லை…
என்பதை அறிந்து கொள்கிறான்…

“வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் அப்பாற்பட்ட …

ஒரு ஜீவனை அடைதலே மோட்சமாகும்…

அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு…

அதை அறிந்து கொண்டால் போதும்.

ஒரு சாதுவை யாரோ கேட்டார்கள்…

“மரணம் என்றால் என்ன?”
“வாழ்வு என்றால் என்ன?”

இதனை அறிந்து கொள்ளவே
நான் உங்களிடம் வந்துள்ளேன்…

அதற்கு, சாதுவானவர் கொடுத்த பதில் மிகவும் அபூர்வமானது…

“அப்படியென்றால்…
வேறெங்காவது செல்லுங்கள்..

நான் இருக்கும் இடத்தில்

மரணமும் கிடையாது…
ஜீவனும் கிடையாது…

ஓஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *