ஔடதம் படக்குழுவினரின் புதிய முயற்சி
நடிகர் ஆரியின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் சவாலை முன்னெடுக்கும் திரையுலகம்
ஆரி வாழ்த்து,
பெரும் கமர்ஷியல் சினிமாக்கள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வாக சில திரைப்படங்கள் வரத்தான் செய்கின்றன, அதுபோல மிக விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஔடதம் திரைப்படம் மருத்துவ உலகின் கருப்பு பக்கங்களை புரட்டிக் காட்டும் தமிழ் திரைப்படமாக வெளிவர இருக்கிறது, என்பதில் எனக்கு மகிழ்ச்சி, இப்படம் குழுவினரின் புதிய முயற்சியாக ஔடதம் பெயர் பொறிக்கப்பட்ட 3 லட்சம் பேனாக்கள் இத்திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கு வழங்க வழங்க இருக்கிறோம் என என்னிடம் தெரிவித்தபோது, பேனாவின் முனைகள் பெரும் சரித்திரங்களை எழுதியும் மாற்றியும் இருக்கிறது அதுபோல வெறும் பேனாக்களை மட்டும் தராமல் நம் தாய்மொழி தமிழில் கையெழுத்திடும் சவாலை முன்னெடுக்குமாறு கூறியவுடன் அதற்கு இசைந்த படக்குழுவினர் தமிழில் கையெழுத்திடு என்கிற விழிப்புணர்வு முழக்கத்தை தமிழகம் அறியச் செய்ய இப்பெரு முயற்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என உறுதியளித்து எனது சிந்தனைக்கு செவி சாய்த்தனர்,
நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்
ஆரி சவால்,
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வு, 2018 ஜீன் மாதம் 30ம் தேதி, டல்லாஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31வது தமிழர் திருவிழாவில் 1119 பேரை வைத்து தாய்மொழி தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர், இச்சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என்கிற உயரிய நோக்கத்துடன் சத்யபாமா பல்கலைக் கழகத்துடன் இணைந்து நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்கிற விழிப்புணர்வு போஸ்டர் செப்டம்பர் 10 அன்று சிறப்பாக வெளியிடப்பட்டு, அலுவல் சார்ந்த கையொப்பத்தை தாய்மொழியில் மாற்றுவது பற்றிய விழிப்புணர்வு தமிழகமெங்கும் பரப்பப்பட்டு வருகிறது, இதற்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் சங்கங்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும், தமிழக மக்களின் ஆதரவு பெருகி வருகிறது, அதேபோல் திரு. உ. சகாயம் ஐ.ஏ.எஸ், அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் பாதை முன்னெடுக்கும் அக்டோபர் 2 மாபெரும் கின்னஸ் உலக சாதனைக்கு மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை உறுதுணையாக நின்று செயல்படுகிறது, இச்சாதனைக்கு தமிழக மக்கள் அனைவரும் தமிழ் இனமாய் ஒன்றிணைந்து வெற்றியடையச் செய்வோம்,
ஔடதம் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நேதாஜி பிரபு, இயக்குனர் ரமணி, மற்றும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நம் தாய்மொழி தமிழில்கையெழுத்திடுவோம்
தமிழால் எழுவோம்.. தமிழராய் நிமிர்வோம்..
வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்…