மனதில்பட்டதைப் பேச தைரியம் கொடுத்தவர் பெரியார் – சிம்பு

ஓப்பனா பேச தைரியம் கொடுத்தவர் பெரியார்.. : சிம்பு

பெரியாரை போற்றும் வகையில் ’பெரியார் குத்து’ என்ற ஆல்பம் பாடலை பாடி, நடனம் ஆடி பாடலை வெளியிட்டார் சிம்பு.

தீபன், சஞ்சய் தயாரித்த இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

இந்நிலையில், இப்பாடலுக்கு திராவிட திருநாள் விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிம்பு, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தீபன், சஞ்சய் ஆகியோருக்கு கீ.விரமணி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் சிம்பு பேசியதாவது:

சினிமா நிகழ்ச்சி, ஸ்கூல் ஆகிய மேடைகளைத் தாண்டி இந்த மேடை எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானதாக பார்க்கிறேன்.

இதைப் பாராட்டு என நினைப்பதை விட, இங்கே எனக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என நினைக்கும் போது சந்தோஷம்.

பெரியாரைப் பற்றி படிக்க வேண்டுமானால் “கடவுளை மற… மனிதனை நினை” அவ்வளவு தான்.

இவ்வளவு பேர் சினிமாவில் இருக்கும் போது, மனதில் பட்டதை பேசிவிடுகிறீர்கள், உங்களைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், எதைப் பற்றி கவலைப்பட மாட்டிக்கிறீர்கள் என பலரும் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள்.

அந்த தன்னம்பிக்கைக்கு காரணம் எங்கப்பா (டி.ஆர்.) தான்.

அவருக்குப் பிறகு மனதில் பட்டதை பேசலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தது பெரியார் தான்.

அதனால் மட்டுமே என்னால் அப்படிப் பேச முடிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் மகனாக பெண் விடுதலையைப் பற்றி பெரியார் பேசியது சாதாரண விஷயமில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெரியாரைக் கொண்டு போய் சேர்க்க நினைத்தோம்.

அதற்காகத் தான் இப்பாடலைப் பாடி, ஆடினேன். இதனை ‘பெரியார் பாடல்’ என்று போடாமல் ‘பெரியார் குத்து’ எனப் போட்டோம். அவருடைய கருத்துக்கள் குத்தாக இருக்கும்.”

இவ்வாறு சிம்பு பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *