டிசம்பர் 3 முதல் 9 வரை ரஜினியின் “பேட்ட” இசை விருந்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இவர்கள் இருவரும் ரஜினியுடன் இணைந்து பணி புரிவது இதுதான் முதன்முறையாகும்.

இதில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், டைரக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.

மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published.

three + seventeen =