சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட இடத்தில் சூர்யா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் லக்னோவில் நடந்து வருகிறது.
இதே உத்தரப் பிரதேசத்தில் மாநிலத்தில்தான் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின்சூட்டிங்கும் நடந்து வருகிறதாம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 3வது படம் இது.
இதில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க, மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், இந்தி நடிகர் போமன் இரானிஉள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
நொய்டாவில் சூர்யா தேசிய பாதுகாப்பு அதிகாரி கெளதம் கங்குலி, ஐபிஎஸ் அதிகாரி ஷாலின் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.