40 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்தார் மகேந்திரன்
ரஜினிகாந்த் நடித்த ஜானி, முள்ளும் மலரும் படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
ரஜினிக்குள் இருக்கும் ஒரு நல்ல நடிகரை இவர்தான் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என பலர் சொல்கின்றனர்.
இவர் அண்மையில் வெளியான தெறி, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இதில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்
தற்போது இதன் சூட்டிங் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.