ரஜினியின் பேட்ட சூட்டிங்கை 2 வாரத்திற்கு முன்பே முடித்த கார்த்திக் சுப்பராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், மகேந்திரன், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன்,பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதியுடன் பேட்ட சூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை ரஜினிகாந்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து பதிவிட்டுள்ளார். அதில்..

“பேட்ட சூட்டிங் நிறைவடைந்தது. 15 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *