ரஜினி 165 படத்திற்கு பேட்ட எனத் தலைப்பிட்ட கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இதுவரை தற்காலிகமாக தலைவர் 165 என பெயரிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை மோசன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.
பேட்ட என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையைமக்க, ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.