ரஜினி ரசிகர்களின் கோட்ட… – பேட்ட திரைவிமர்சனம்

ரஜினி ரசிகர்களின் கோட்ட… பேட்ட விமர்சனம்

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், சபீர், விவேக் பிரசன்னா மற்றும் பலர்
இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – திரு
எடிட்டர் – விவேக் ஹர்ஷன்
பாடல்கள் – விவேக், தனுஷ், கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்

கதை எப்படி…

இந்த படத்தில் ரஜினிகாந்த் பெயர் காளி.

ஊட்டி போன்ற ஒரு பகுதியில் உள்ள ஒரு காலேஜ் ஹாஸ்டலுக்கு வார்ட்ணாக வருகிறார் காளி.

வரும்போதே பக்காவாக ஒரு திட்டத்துடன் அங்கே நுழைகிறார்.

அதுவும் அமைச்சர் சிபாரிசுடன் வருகிறார்.

அதே காலேஜில் படிக்கும் ஒரு மாணவனின் காதலை சேர்த்து வைக்கிறார். அவன் யார் ? என்பது ப்ளாஷ்பேக்.

இடையில் அதே ஊரில் இருக்கும் சிம்ரன் உடன் ரொமான்ஸ் செய்கிறார் ரஜினி.

அங்கு ஹாஸ்டல் சூப்பர் வைசராக இருக்கிறார் முனிஸ்காந்த்.

கல்லூரியில் படிக்கும் பணக்கார மாணவர் பாபி சிம்ஹா ஹாஸ்டல் மாணவர்களை (ஜுனியர்) ராக்கிங் செய்கிறார்.

இதனை ரஜினி கண்டிக்கிறார். மேலும் மாணவர்களுக்கு நல்ல உணவு கொடுக்க மெஸ் காண்ட்ராக்டரையும் (சிம்ஹாவின் அப்பா ஆடுகளம் நரேன்) பகைத்து கொள்கிறார்.

எனவே பாபி சிம்ஹா ரவுடிகளை அனுப்பி ரஜினியை அடிக்க திட்டமிடுகிறார்.

ஆனால் அதே நேரம் வேறு ஒரு கும்பலும் அங்கு ரஜினியை கொல்ல ஹாஸ்டலுக்கு வருகின்றனர்.

அப்படி என்றால் இந்த காளி யார்.? அவரின் பின்னணி என்ன? படத்திற்கும் பேட்ட-க்கும் என்ன சம்பந்தம்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கபாலி, காலா படங்களில் கிளாசிக் ரஜினியை பார்த்தோம்.

இதில் வெகுநாட்களுக்கு பிறகு ஸ்டைல் பார்முலா ரஜினியைப் பார்க்கலாம்.

வயதுக்கேற்ற கேரக்டரை தெளிவாக செய்துள்ளார் ரஜினிகாந்த். ப்ளாஸ்பேக்கிலும் முறுக்கு மீசையில் நல்ல வெரைட்டி காட்டியுள்ளார்.

குழந்தைகளா… என ரஜினி கூப்பிடுவதே கொள்ளை அழகு.

சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதீன் சித்திக் என அனைவரும் கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளனர்.

இதில் நவாசுதீன் & விஜய்சேதுபதி கேங் மாஸ் காட்டியுள்ளனர். அதுவும் விஜய் சேதுபதி யார்? என்ற கேரக்டர் செம ட்விஸ்ட்.

ரஜினி & விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் அனல் பறக்கும். சபாஷ் சரியான போட்டி.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் திரு அவர்கள் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

ஹாஸ்டல் மலை பகுதிகள் காட்சி அருமை.

அதுபோல் ரஜினி த்ரிஷா சசிகுமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் விருந்தளிக்கும்.

அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பலம்.

இளமை திரும்புதே… பாடலில் ரொமான்டிக் ரஜினியை பார்க்கலாம்.

ஆஹா கல்யாணம், பேட்ட பராக், மரண மாஸ் பாடல் ரசிகர்களின் பேவரைட்.

தனக்குள் வைத்திருந்த ரஜினி வெறியன் என்ற சிங்கத்தை வெளியே எடுத்து விட்டுள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.

எப்படி எல்லாம் ரஜினியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற பல்ஸ் தெரிந்தவர் தான் இவர்.

படத்தின் வசனங்களும் அனல் பறக்கிறது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செம.

2ஆம் பாதியில் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்கும்படியாக இல்லை.

பேட்ட.. ரஜினி ரசிகர்களின் கோட்ட

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *