மரண மாஸை தொடர்ந்து ரஜினியின் அடுத்த அதிரடி தலைவர் பைலா

காலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது.

எனவே அதிரடியாக ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தலைவர் குத்து என்ற பெயரில் மரண மாஸ் பாடலை வெளியிட்டனர்.

இந்த பாடலை விவேக் எழுத எஸ்பிபி மற்றும் அனிருத் பாடியிருந்தனர்.

அடுத்த பாடலை நாளை டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

தலைவர் பைலா என்ற பெயரில் ஊல்ல்ல்லா என்று பாடல் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

4 × 2 =