ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் & சிங்கிள் ட்ராக் ரிலீஸ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வருகிற நவம்பர் 29ல் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ரஜினியின் மற்றொரு படமான பேட்ட அடுத்த வருடம் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளில் (டிசம்பர் 12ல்) அவரது ரசிகர்களுக்கு பேட்ட விருந்தளிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பேட்ட பட டீசரையும் சிங்கிள் ட்ராக்கையும் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய்சேதுபதி, டைரக்டர் மகேந்திரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.