ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பேட்ட டீசர் விருந்து

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மூத்த இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 3ல் மரண மாஸ் பாடல், டிசம்பர் 7ல் தலைவர் பைலா, அதனையடுத்து டிசம்பர் 9ல் அனைத்து பாடல்களையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பேட்ட பட டீசரை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *