96 தான் என் கடைசிப்படம்..; டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி விளக்கம்

திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி பிரபலமானவர் சின்மயி.

அண்மையில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து படு பிரபலமானார். மீ டூ விவகாரத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

பாடல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார் இவர்.

அண்மையில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு டப்பிங் பேசியிருந்தார்.
சில தினங்களுக்கு முன் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை 2 பெண்கள் தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாகவும் சின்மயி பேசியிருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்.. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

20 − ten =