என்னவொரு சமூக பொறுப்பு அயோக்யா.; விஷாலை விமர்சித்த ராமதாஸ்

விஷால் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கியுள்ள படம் அயோக்யா.

இப்படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார் விஷால்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன்.இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

என இரண்டு பதிவுகளை போட்டு கடுமையாக விஷாலை விமர்சித்துள்ளார் ராமதாஸ்.

 

Leave a Reply

Your email address will not be published.

twenty − three =