விஜய்சேதுபதியின் “சீதக்காதி”படத்தலைப்பை மாற்ற கோரிக்கை

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 75 வயது கிழவராக விஜய்சேதுபதி நடித்ள்ள படம் சீதக்காதி

இப்படம் அடுத்த வாரம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

அக்கட்சியின் அறிக்கையில்…

சீதக்காதி தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்தவர். இஸ்லாமியராக இருந்தாலும், அனைத்து மக்களுக்காகவும், மனித நேயத்திற்காகவும் வாழ்ந்தவர், அப்துல் காதர் என்ற சீதக்காதி.

இவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும், எவ்வித நடவடிக்கையையும், இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது.

விஜய் சேதுபதி, நல்ல நடிகர். சீதக்காதி என்ற, படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

two + two =