பொன் மாணிக்கவேல் திரைவிமர்சனம் – (2.5/5)

V. ஹித்ததஷ் ஜபக் தயாரிப்பில், பிரபுதேவா,நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன், பிரியதர்ஷினி, சார்லஸ் வினோத், பிரியதர்ஷினி இவர்களின் நடிப்பில் : AC. முகில் பசல்லப்பன் இயக்கத்தில், D.இமான் இசையில் உருவாகி வெளிவந்த படம் ‘பொன்.மொணிக்கவேல்’

சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் ஒரு பெண் கற்பழிக்க பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து அதற்கு நீதி கிடைக்காத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்து விவசாயம் செய்து கொண்டிருக்கும் IAS அதிகாரி பொன்.மாணிக்கவேல் (பிரபு தேவா). பின்பு சென்னையில் உயர் நீதி மன்றம் நீதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரை கொலை செய்தது யார் என்று துப்பு கிடைக்காததால் உதவிக்காக மாணிக்கவேல்(ஐ) அழைக்கின்றனர் காவல்துறையினர்.

மீண்டும் பணிக்கு வந்தபின் மிகவும் அமைதியாக இந்த வழக்கை விசாரிக்கிறார் இவர், சந்தேகத்திற்காக இவர் விசாரிக்க போகும் நபர் இன்ஸ்பெக்டர் அறிவழகன் (கவிதா பாரதி). அந்த இடத்திற்கு இவர் செல்வதற்குள் அவரும் கொலை செய்யப்படுகிறார். மாணிக்கவேல் செல்லும் இடத்திற்கு எப்பொழுதும் பின் தொடரும் நபர் கைலாஷ் (சார்லஸ் வினோத்). அவரை விசாரித்த பின்னரே தெரியவரும் தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர் அர்ஜுன் K மாறன் தான் கொலையாளியின் அடுத்த டார்கெட் என்று.

ஆரம்பத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தங்கம் வென்றவராகவும், கன்னியமான போலீசாகவும் இருந்த இவர், சேலத்தில் நடந்த சம்பவத்தின் பிறகு பணத்தை மட்டும் வாழ்க்கையின் குறியாக வைத்திருப்பதாக அர்ஜுனிடம் பேசி நெருக்கம் அடைகிறார்.

இவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 10 கோடி ருபாய் பேரம் பேசுகிறார் மாணிக்கவேல், அப்பொழுது தான் தெரியவரும் இவர் நஸ்ரதுல்லா (மகேந்திரன்) அவரின் பேத்தி தன்யா (அதிரா பட்டேல்)ன் கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி அர்ஜுன் என்பதும் அதை பழி தீர்க்கவே நஸ்ரதுல்லா இவரை கொலை செய்ய முற்படுகிறார் என்பதும் தெரிய வருகிறது.

உண்மை அனைத்தும் தெரிந்த பிறகும் இவர் என் அர்ஜுன் k மாறனை காப்பாற்றுகிறார், இறுதி வரை காப்பாற்றினாரா? நஸ்ரதுல்லாவை என்ன செய்தார்? என்பது கதையின் அடுத்தடுத்த திருப்பங்களே தெரியப்படுத்தும்.

கதை ஆரம்பித்த முதல் காட்சிமுதலே பரபரப்பாக இருக்க வேண்டிய திரைக்கதையில் அடிக்கடி ரொமான்ஸ் காட்சிகள் வருவது சற்று படத்தின் வேகத்தை குறைக்கிறது.

‘ஜிட்டான் ஜினுக்கு’ பாடலின் இறுதியில் நடனமாடுபவரின் மேல் அர்ஜுன் விட்டெறிந்த காசை காவலர்கள் இருவர் கீழிருந்து அதை எடுத்து வரும் காட்சி, காவல் துறையை இழிவு படுத்துவதுபோல் இருந்தது.

என்னதான் போலீஸாக இருந்தாலும் மாணிக்கவேல் நினைத்ததை எல்லாம் செய்வதாகக் காட்டுவதை ஏற்கமுடியவில்லை. அன்பரசி(மாணிக்கவேல் மனைவி), உடன் பணிபுரியும் அதிகாரியோ யாருக்கு வில்லன்களால் ஆபத்து என்றாலும் அடுத்த நொடியே மாணிக்கவேல் அங்கு ஆஜராகிவிடுகிறார்.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை பிரபுதேவாவைத் தவிர மற்ற நடிகர்கள் யாருக்கும் லிப் சிங்க் ஆகவில்லை. வேற்று மொழித் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்ற உணர்வு எழுகிறது.

காட்சிக்குக் காட்சி ட்விஸ்ட் என்ற பெயரில் சோதித்துக் கொண்டிருக்கும் படம் க்ளைமாக்ஸில் இன்னொரு ட்விஸ்ட்டை வைத்து மேலும் சோதிக்கிறது. படம் முடியப் போகிறது என்ற நேரத்தில் க்ளைமாக்ஸுக்கு முன்பாக புதிதாக ஒரு வில்லனை வேறு அறிமுகப்படுத்தி சோதிக்கிறார் இயக்குநர். படத்தில் ஒரே நல்ல விஷயம் என்றால் ‘மீ டூ’ இயக்கம் குறித்துக் காட்டப்பட்ட விதம்தான். அதுவும்படம் போகிற போக்கில் வந்துவிட்டதால் பெரிதாக ஒட்டவில்லை.

டி.இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ பாடல் மட்டும் கேட்கும் வகையில் இருந்தது.

கே.ஜி வெங்கடேஷின் கேமரா கமர்ஷியல் படத்துக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளது.

நாயகி நிவேதா பெத்துராஜுக்கு இந்தப் படத்தில் எந்த வேலையும் இல்லை. ஒரு பாடல் காட்சிக்கும், சில காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

வழக்கமாக இதுபோன்ற படங்களில் வரும் ஸ்டைலிஷ் வில்லன்களுக்கு என்ன வேலையோ அதே வேலைதான் சுரேஷ் மேனனுக்கு.

ஒருசில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஈர்க்கிறார்.

சுவாரஸ்யமான அம்சங்களோ, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளோ இல்லாததால் ஒருமுறை பார்ப்பதற்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்த ‘பொன் மாணிக்கவேல்’.

பொன் மாணிக்கவேல் – அட போங்க மாணிக்கவேல்

Leave a Reply

Your email address will not be published.

14 − 9 =