1028 நாட்கள் எதை குறிக்கிறது? ; பிரெஞ்சு ஓபன் அரையிறுதி போட்டியில் பரபரப்பு ;

காஸ்பர் ரூட் மற்றும் மரின் சிலிச் இடையேயான பிரெஞ்சு ஓபன் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. போட்டியின் இடையில் சூழலியல் போராளி ஒருவர் மைதானத்தின் நடுவே ஓடி வந்து தன்னை வலையில் கட்டிக்கொண்டார். அவர் அணிந்திருந்த ஆடையில் “இன்னும் 1028 நாட்கள் உள்ளது” என குறிப்பிட்டிருந்தார். 1028 நாள் எதை குறிக்கிறது என்பதை பற்றி தெரியவில்லை.

மூன்றாவது செட்டின் ஆறாவது ஆட்டத்தின் போது கோர்ட் பிலிப் சாட்ரியர் கூட்டத்திலிருந்து அந்தப் பெண் குதித்து அவரை வலையுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

அதன் பின், பாதுகாப்புக் குழுவினர் அந்த பெண் தன்னை வலையில் இணைத்துக் கொள்ள பயன்படுத்திய கருவிகளையும் அவர் வேறு ஏதேனும் ஆயுதங்கள் வைத்துள்ளாரா என்பதை கண்டறிந்த பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

five × 5 =